Welcome to My New Blogging Blog
-
கிண்டில், கேரட் அல்வா, தயிர் வடை..
ஐந்து ஆறு வருடங்களாய் படிக்க வாங்கி அலமாரிகள், இடங்கள் , தட்பவெப்பங்கள் மாறி, கடல் தாண்டி பயணித்து உயரமான இடத்தில கம்பீரமாய் உட்காந்திருந்த புத்தங்களை இந்த வருடத்தில் கண்டிப்பாக முடித்து விட வேண்டும் என்ற வைராக்கியத்துடன் 2020 ஐ தொடங்கினேன். திசையில்லாத வானில் தனக்கென்று ஒரு பாதை அறிந்த பறவைகள் குழம்புவதில்லை. கூண்டில் வசதியாக இருந்து பறப்பதை கனவு மட்டுமே காண்பவை சாமர்த்தியமான காரணங்களை போலி சலிப்போடு விடாமல் வழங்கிக்கொண்டே இருக்கும். உத்வேகம் பிறந்து மொட்டை மாடி… Read more
-
சுடோகுயி – வாசிப்பனுபவம்
ஒரு kaleidoscope க்குள் அடைக்கப்பட்டிருக்கும் வண்ணங்களின் எண்ணற்ற பிம்ப பிரதி பிம்ப உருவங்களை உருவாக்குவது கை அசைவு. அதன் அர்த்தங்களை உருவாக்குவது அந்த கணத்தின் எண்ணங்கள். ஏதோ ஒன்றால் நாம் தடங்கலாகி தேங்க அதை மீண்டும் ஓட வைக்கும் சிறிய உதவி எங்கிருந்தும் வரலாம். ஆனால் அப்படி வரும் போது அது வரை முறுக்கிக்கொண்டு முரண்டு பிடிக்கும் மனம், சட்டென்று குழந்தையென்று மாறி கைக்கொடுக்கும். இந்த பெயரிலி தொடர்பை அறிவியலால் அணுகலாம், தத்துவத்தால் விசாரிக்கலாம், கலையால் கரையலாம்… Read more
Follow My Blog
Get new content delivered directly to your inbox.